விநாயகர் கோவில் திருவிழா: பறவை காவடியில் பக்தர்கள் பரவசம்
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ஊர்வலம் வந்தது பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்தது.
பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் பிரசித்தி பெற்ற, விநாயகர் கோவில் திருவிழா கடந்த 1-ம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், சிறப்பு பூஜைகள், முகூர்த்தத்தால் நடுதல், கொடியேற்றுதல், காப்பு கட்டுதல், மதிய கால பூஜை மற்றும் கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து அம்மன் ஹோமம், சிறப்பு பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜை, மதிய கால பூஜை, தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள், உள்ளூர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை சிவஹோமம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. தொடர்ந்து குமார் குருசாமி தலைமையில், விளக்கலாடி பாலம் அருகே உள்ள ஆற்றில் பறவை காவடி, வேல் பூட்டிய ரதங்கள், பூ காவடிகள் பல்வேறு வாத்திய இசைகளுடன் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை வந்தடைந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பறவை காவடியில் ஊர்வலம் வந்தது, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு இரவு பொது ஏலம் மற்றும் வான வேடிக்கை கள் நடத்தப்பட்டு, இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நேற்று காலை அம்மன் தேர் பவனி மற்றும், இன்று தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் மற்றும் மாவிளக்கு பூஜை, அம்மனை குழி விடுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.