சயன திருக்கோலத்தில் பரமக்குடி முத்தாலம்மன் அருள்பாலிப்பு
ADDED :563 days ago
பரமக்குடி; பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் அம்மன் சயன திருக்கோலத்தில் பூ பல்லக்கில் பவனி வந்தார். முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் நேற்று முன்தினம் காலை தொடங்கி பல ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை அம்மன் சயன திருக்கோலத்தில் அருள் பாலித்தார். உற்சவ சாந்தி அபிஷேகமும், இரவு தீபாராதனைகளுடன் விழா நிறைவடைகிறது. தொடர்ந்து விழாவையொட்டி 12 நாட்களும் பட்டிமன்றம், கரகாட்டம், ஆடல் பாடல், பரதநாட்டியம் என பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.