/
கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பாலிகை விடும் நிகழ்ச்சி; பக்தர்கள் பரவசம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பாலிகை விடும் நிகழ்ச்சி; பக்தர்கள் பரவசம்
ADDED :925 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவத்தில் பாலிகை விடுதல் நிகழ்வு நடந்தது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தப்பட்டு நலங்கு உற்சவம் நடந்தது. தொடர்ந்து இன்று கோவில் பிரம்ம தீர்த்தக்கரையில், சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடந்தது. உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.