வேளிமலை குமாரசுவாமி கோவில் கிரிவலத்தில் திரளான பக்தர்கள்!
ADDED :4737 days ago
தக்கலை: வேளிமலை குமாரசுவாமி கோவிலில் திங்களன்று மாலையில் கிரிவலம் நடந்தது. குமாரகோவில் வேல்முருகன் சேவா சங்கத்தின் சார்பில் மாதந்தோறும் பவுர்ணமியன்று நடந்துவரும் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் திங்களன்று நடந்தது. அன்றைய தினம் மாலையில் பிள்ளையார் கோவில் சன்னதி முன்பிருந்து குத்துவிளக்கு ஏற்றுதலுடன் துவங்கியது. தொடர்ந்து பக்தர்கள் பஜனை பாடியபடி கோவிலைச் சுற்றி கிரிவலம் வந்தனர். அதன் இறுதியில் குமாரசுவாமிக்கு தீபாராதனையுடன் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக வேலுதாஸ் ஆன்மீக உரையாற்றிàர். கிரிவலத்தில் சங்கத்தி தலைவர் டாக்டர் சுகுமாரன், பொதுச் செயலாளர் அஜி குமார் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.