உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோவிலில் பஞ்சமி சிறப்பு ஆரத்தி வழிபாடு
ADDED :637 days ago
உஜ்ஜைனி; உஜ்ஜயினியில் உள்ள மகாகாளேஸ்வரர் கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு ஆரத்தி நடத்தப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் அமைந்துள்ள மகாகாளேஸ்வரர் கோயிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பஸ்ம ஆரத்தி நடைபெற்றது. இங்கு பஸ்ம ஆரத்தியில் பங்கேற்கும் பக்தரின் விருப்பங்கள் நிறைவேறும் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இன்று (30ம்தேதி) நடைபெற்ற சிறப்பு ஆரத்தியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஈசனை வழிபட்டனர்.