உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

மேலுார்; மில்கேட் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதமிருந்தனர். இன்று சாலக்கிரையான் ஊருணி அருகே உள்ள விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் 2 கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !