உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் பூ பல்லக்கில் பவனி வந்த பெருமாள்; திருக்கல்யாண விழாவில் கோலாகலம்

பரமக்குடியில் பூ பல்லக்கில் பவனி வந்த பெருமாள்; திருக்கல்யாண விழாவில் கோலாகலம்

பரமக்குடி; பரமக்குடி பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழாவில், பூ பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சுந்தரராஜ பெருமாள் கோலாகலமாக வீதி வலம் வந்தார்.

கோயிலில் மார்ச் 25 பங்குனி உத்திரத்தன்று சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண மகோத்சவம் நடந்தது. தினமும் பெருமாள், தாயார் ஊஞ்சல் சேவையில் அருள் பாலித்தனர். நேற்று காலை அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் அமர்ந்த கோலத்தில் பூ பல்லக்கில் எழுந்துருளினார். மேலும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க கோலாகலமாக வீதி உலா வந்தார். மேளதாளம் முழங்க வான வேடிக்கைகளுடன் பவனி வந்த பெருமாள் இரவு 12:00 மணிக்கு கோயிலை அடைந்தார். *இதே போல் எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து 5ம் நாளான நேற்று இரவு பூ பல்லக்கில் தாயார், பெருமாள் உடன் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !