உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை
ADDED :914 days ago
உத்தரகோசமங்கை, உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற வராகி அம்மன் கோயில் உள்ளது. இன்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு மூலவருக்கு காலை 9:00 மணிக்கு பால், பன்னீர், இளநீர், திரவியயப்பொடி உள்ளிட்ட 16 வகையாக அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள அம்மிக்கல்லில் பெண்கள் பச்சை விரலி மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். எலுமிச்சை, தேங்காய் உள்ளிட்டவைகளில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.