திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோக பைரவாஷ்டமி வழிபாடு
ADDED :521 days ago
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவர் யோக நிலையில் எழுந்தருளியுள்ளர். நேற்று காலை 11:30 மணிக்கு மூலவர் பைரவருக்கு கணேஷ், பிரதோஷ் குருக்களால் பைரவர் பூஜை நடந்தது. தொடர்ந்து பல வித திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சந்தனக்காப்பு தாமரை பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, அலங்கார தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டனர்.