உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயமங்கலம் கோயில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள்

தாயமங்கலம் கோயில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள்

மானாமதுரை; மானாமதுரையில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு தாயமங்கலம் இருக்கும் திசையை நோக்கி ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் பொங்கல் விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் தாயமங்கலத்திற்கு வருகை தந்து தீச்சட்டி, கரும்பாலை தொட்டில்,முடி காணிக்கை உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு,கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டினர். இந்நிலையில் தாயமங்கலத்திற்கு அருகே உள்ள மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வருடம் தோறும் பொங்கல் விழா அன்று தாயமங்கலம் கோயில் இருக்கும் திசையை நோக்கி ஏராளமானோர் வயல்வெளிகள் மற்றும் பொது இடங்களில் பொங்கல் வைத்து ஆடு,கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டிக் கொண்டனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா அன்று கோயிலில் அதிகளவு கூட்டம் இருக்கும் என்பதால் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் கோயில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை நோக்கி வழிபடுவது விசேஷமாகும். இதனை வருடம் தோறும் தொடர்ந்து செய்து வருவதோடு அர்த்தமில்லாமல் உறவினர்களையும் அழைத்து பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !