ஏகாதசி வழிபாடு; கரிவரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :895 days ago
கோவை; அன்னூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி ஏகாதசி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.