இறைவன் அருள்
ADDED :580 days ago
முஸ்லிம்களின் எதிரிகளான குரைஷிகளின் படைத்தலைவன் உத்பாவும், அபூஜஹீலும் போரில் தோற்றனர். அவர்களது படையினர் அங்கிருந்து ஓடினர். போரில் ஆறு முஹாஜிரீன்கள், எட்டு அன்சாரிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் நாயகத்தின் படைக்கு துணையாக வந்தவர்கள். குரைஷிகளின் பக்கம் எழுபது பேர் கொல்லப்பட்டனர்.
ஆயிரக்கணக்கில் வீரர்கள், நுாறு குதிரைப் படை இருந்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் முஸ்லிம் படை வென்றது. இதற்கு இறைவனின் அருளே காரணம் .