உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைப்பாரி விழா

தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைப்பாரி விழா

தேவகோட்டை; தேவகோட்டை தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி முளைப்பாரி விழா கடந்த 2 ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. எட்டு தினங்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தினமும் வெவ்வேறு அம்மன் அலங்காரம் பூஜைகள் நடந்தன. இரவில் அம்மன் கரகம் எடுத்து ஊர்வலமாக சென்று பூஜைகள் நடந்தன. பெண்கள் விளக்குகள் ஏற்றி விளக்கு பூஜை நடத்தினர். பக்தர்கள் பூக்களை ஊர்வலமாக எடுத்துச் வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். நிறைவு நாளான நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்து வழிபட்டனர். ஏராளமானோர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !