உச்சிமாகாளியம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :515 days ago
பாலமேடு; பாலமேடு அருகே பெரிய இலந்தைகுளம் உச்சிமாகாளியம்மன் கோயில் உற்ஸவ விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் அம்மனுக்கு கரகம் ஜோடித்து கோயில் அழைத்து வந்தனர். அன்றிரவு அம்மன் வீதி உலா நடந்தது. பக்தர்கள் மாவிளக்கு எடுத்தனர். சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. நேற்று காலை முளைப்பாரி ஊர்வலத்தை தொடர்ந்து கிடா வெட்டி, அக்னிசட்டி எடுத்தும், அங்கப்பிரதட்சணம் மற்றும் பெண்கள் தரையில் வெப்பிலையால் வரி கோடு போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கிராம மரியாதைக்காரர்கள், கிராமத்தினர் செய்திருந்தனர்.