திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED :689 days ago
திருவள்ளூர்; தீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது, விழாவில் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி வலம் வந்து அருள்பாலித்து வருகிறார், விழாவில் இன்று தீர்த்தீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பாளுக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.