/
கோயில்கள் செய்திகள் / சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி பதியில் இருந்து முட்டபதிக்கு முத்துக்குடை ஊர்வலம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி பதியில் இருந்து முட்டபதிக்கு முத்துக்குடை ஊர்வலம்
ADDED :555 days ago
நாகர்கோவில்: சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் இருந்து முட்டபதிக்கு முத்துக்குடை ஊர்வலம் நடைபெற்றது. அய்யா வைகுண்டசாமி சாமித்தோப்பு பதியில் தவம் இருந்த போது அவரை கைது செய்ய கலிநீசமன்னன்தனது படையை அனுப்பினான்.
தவத்துக்கு பாதுகாப்பு கேட்பதற்காக முட்டபதி பாற்கடல் வழியாக பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த நாராயணசாமியிடம் அறிவுரை கேட்பதற்காக சென்று அன்று மாலையே திரும்பினார். இதை நினைவு கூரும் வகையில், பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடைபெற்றது. இதனை தலைமைபதி தலைமை குரு தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.