அயோத்தி ராமர் கோயிலில் பஞ்சமி வழிபாடு; மனமுருகி பக்தர்கள் தரிசனம்
ADDED :553 days ago
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் சைத்ரா நவராத்திரி எனும் ராம நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பகவான் ஸ்ரீ ராம்லல்லா அனைத்தையும் உள்ளடக்கிய சத்தியப் பிரமாணம் மற்றும் வேதங்களின் புனிதத்தைப் பாதுகாப்பவர். ஸ்ரீ ராமரின் அவதாரம் பிரபஞ்சத்தின் நலனை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. இத்தகைய சிறப்பு மிக்க ஸ்ரீராமரை வழிபட சைத்ரா நவராத்திரி எனும் ராம நவராத்திரி விழாவிற்காக அயோத்தியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். விழாவில் இன்று சைத்ரா சுக்ல பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ராமபிரானை பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர். விழாவின் 9ம் நாள் ராம நவமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக அயோத்தி நகரே தயாராகி வருகிறது.