நெல்லை முத்தாரம்மன் கோயிலில் பூம்பல்லக்கு உற்சவம்!
ADDED :4736 days ago
திருநெல்வேலி: நெல்லை டவுன் முத்தாரம்மன் கோயிலில் பூம்பல்லக்கு உற்சவ விழா நடந்தது.நெல்லை டவுன், சிவா தெரு, குளப்பிறை தெரு முத்தாரம்மன் கோயிலில் நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் நடந்தது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது. இரவு 9 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க முத்தாரம்மன் பூம்பல்லக்கு வாகனத்தில் திரு வீதி உலா நடந்தது.ஏற்பாடுகளை நெல்லை டவுன் சிவா தெரு, குளப்பிறைத் தெரு பொதுமக்கள் செய்திருந்தனர்.