பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சண்முக திரிசதி அர்ச்சனை
ADDED :542 days ago
கோவை; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் ஸ்ரீ சண்முக திரிசதி அர்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கடன் பிரச்சனை, திருமண தடை, உடல் நலக் கோளாறு, பூமி பிரச்சனை, சொத்து பிரச்சனை , கோர்ட் வழக்குகள், கணவன் மனைவி ஒற்றுமை ஆகியவற்றுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. பொதுமக்களின் ஜாதகங்கள் பூஜையில் வைக்கப்பட்டு, அதற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்த நிகழ்வில் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்த முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.