உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ராம நவமி உத்ஸவம்

திருப்புத்தூர் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ராம நவமி உத்ஸவம்

திருப்புத்தூர்; திருப்புத்தூர் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ராம நவமி உத்ஸவம் நடந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி உத்ஸவம் கொண்டாடப்படும். நேற்று காலை 10:30 மணிக்கு பட்டாச்சார்யர்களால் சிறப்பு நாம கீர்த்தனைகள் மூலவர் ஸ்ரீ ராமர், லெட்சுமணன், சீதை தேவி சன்னதியில் நடந்தது. தொடர்ந்து  அபிேஷகம் நடைபெறும்.  பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. பின்னர் ராம பஜனையில் பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாட்டினை ஆ.பி.சீ.அ.ட்ரஸ்ட், பரம்பரை அறங்காவலர்கள், விழாக்குழவினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !