உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா; கருட கொடியேற்றத்துடன் துவக்கம்

அவிநாசி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா; கருட கொடியேற்றத்துடன் துவக்கம்

அவிநாசி; கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில், உப கோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.

கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, சூரிய, சந்திர மண்டல காட்சிகள், அதிகார நந்தி, கிளி, அன்ன வாகன காட்சிகள் என தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக லிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலான ஸ்ரீ பூமி நீளா நாயகி ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று வாஸ்து ஹோமம், திக்பாலகர் பூஜைகள் நடைபெற்றது. இன்று புண்யாகவாஷனம், கருட கலச ஆவாகனம், மூலமந்திர ஹோமத்தை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைப்பெற்றது. அதன்பிறகு கருட கொடி ஏற்றப்பட்டது. தேர்விழாவை முன்னிட்டு, நடைப்பெற்ற கஜ ஆரோகணம், வரும் 26ம் தேதி அன்று கஜ அவரோகணம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !