வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் தங்ககுதிரை மதுரை வந்தது
ADDED :580 days ago
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவில் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் தங்ககுதிரை வாகனம் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஏப்., 23ல் மதுரை வருகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் தங்ககுதிரை வாகனம் அழகர் கோவிலில் இருந்து தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கலெக்டர் உத்தரவுக்கு கோர்ட் தடை: முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.