மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
532 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
532 days ago
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை மாதம் பூரம் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா இன்று (19ம் தேதி) சிறப்பாக நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 12.15 மணியலில் பூரம் திருவிழா விளம்பரம் செய்யும் வகையில் செண்டை மேளம் முழங்க நெய்திலைக்காவு பகவதி அம்மன், எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை மீது எழுந்தருளி வடக்கு நாதரை வணங்கி தெற்கு கோபுர நடை திறந்து வெளியை வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து 30 மணி நேரம் நீண்டு நிற்க்கும் விழா தொடங்கின. முன்னதாக விழா நாள் மாலை தேக்கின்க்காடு மைதானத்தில் இரு புறம் நேருக்கு நேர் அணி வகுத்து நிற்க்கும் பாரமேக்காவு பகவதி அம்மன் மற்றும் திருவம்பாடி கிருஷ்ணர் கோவில்களின் தலா 15 யானைகள் அணியும் ஆடை, ஆபரண, முத்து மணி கடைகளின் கண்காட்சி நேற்று முன்தினம் நடந்தது. யானைச்சமயம் என்ற அழைக்கும் இந்த கண்காட்சியை ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து மாலை 7 மணிக்கு நடந்த வான வேடிக்கையை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர்.
532 days ago
532 days ago