ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் பெண்கள் நடனமாடி முளைப்பாரி ஊர்வலம்
ADDED :636 days ago
மேட்டுப்பாளையம்; தாசம்பாளையம் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, பெண்கள் முளைப்பாரி எடுத்து நடனமாடி ஊர்வலம் சென்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையத்தில் ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில் நாளை காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையடுத்து, நேற்று மாலை ஊர் மக்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர். தாசம்பாளையம் ஊருக்கு முன் உள்ள ராமர் கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம், ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து திருக்கோவிலை அடைந்தது. ஊர்வலத்தின் போது 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரிகளை தலையில் சுமந்து, நடனமாடி நடந்து வந்தனர்.