ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :889 days ago
கோவை; ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் சித்திரை மாதம் இரண்டாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்பம் மற்றும் ராஜ அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.