முத்துமாரியம்மன் கோயில் 59ம் ஆண்டு சித்திரை மாத திருக்கல்யாண உற்சவம்
ADDED :153 days ago
கோவை: ராம்நகர் கோகலே வீதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் 59ம் ஆண்டு சித்திரை மாத திருக்கல்யாண உற்சவம் நடந்தது. செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
அம்மன் அழைத்தல், வள்ளி கும்மி, பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தன. நேற்று மாலை மஞ்சள் நீராடல், சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.