உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மக்கள் வெள்ளத்தில் எழுந்தருளிய கள்ளழகர்; பெரியகுளத்தில் பக்தர்கள் பரவசம்

மக்கள் வெள்ளத்தில் எழுந்தருளிய கள்ளழகர்; பெரியகுளத்தில் பக்தர்கள் பரவசம்

பெரியகுளம்; பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கள்ளழகராக 37 இடங்களில் வடகரை, தென்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் வீதி உலா வந்தார்.

பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து வரதராஜப் பெருமாள் இன்று காலை 5:30 மணிக்கு குதிரை வாகனத்தில் கள்ளழகராக எழுந்தருளினார். பச்சைப்பட்டு,சிவப்பு பொட்டுடன் கீழ வடகரை அழகர்சாமிபுரம் வராகநதிகரையோரத்தில் கோவிந்தா, கோவிந்தா, வந்தாரு வந்தாரு அழகர் வந்தாரு என பக்தர்கள் கோஷத்துடன் இறங்கினார். இதனை தொடர்ந்து வடகரையில் வழி நெடுகிலும் பக்தர்கள் வெள்ளத்தில் குதிரையில் ஆடி, அசைந்தபடி வந்தார். மண்டகபடிதாரர்கள் விதவிதமான மாலைகள் சூடி கள்ளழகரை அழகுபடுத்தி வழிபட்டனர். அழகர் வேடமணிந்த பக்தர்கள் 3 பேர் தண்ணீர் பீய்ச்சி அடித்து பக்தர்களை குஷி படுத்தினர். வடகரை, தென்கரை பகுதிகளில் 37 இடங்களில் கள்ளழகர் வீதி உலா வந்தார். பச்சைப்பட்டு, சிவப்பு பொட்டு குறித்து அர்ச்சகர்கள் பாபு, கண்ணன் கூறுகையில்: அனைவருக்கும் சகல ஐஸ்வரியம் கிடைக்கும். விரைவில் மழை பெய்யும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !