கூத்தாண்டவர் கோவில் திருவிழா; பூசாரியிடம் தாலி கட்டி திருநங்கைகள் வழிபாடு
ADDED :532 days ago
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று இரவு கூத்தாண்டவருக்கு திருக்கல்யாணம், திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்வு நடந்தது. நேற்று இரவு பூசாரியிடம் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இரவு திருநங்கையருக்கான அழகிப் போட்டி நடந்தது. இதில், புதுச்சேரி, தமிழகம், கேரளா மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டனர். இன்று காலை கூத்தாண்டவர் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து வழிபட்டனர்.