மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
527 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
527 days ago
திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறையில் உலக நன்மை வேண்டி திரிபுரசுந்தரி அம்பாளுக்கு, 1008 சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.
திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறையில் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தபுரீஸ்வரர் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமியையொட்டி கோவிலில் தீர்த்தபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பாள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. குரோதி வருடத்தில் ஏற்படும் சங்கடங்களை தீர்க்க, திரிபுரசுந்தரி அம்மன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, 1008 சகஸ்ர நாம அர்ச்சனை மற்றும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு வழிபாடு நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி மற்றும் அம்பாளை வழிபட்டனர்.
527 days ago
527 days ago