பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு ஹோமம்
ADDED :639 days ago
விழுப்புரம் ; பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு ஹோமம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுதர்சன தன்வந்திரி ஹோமம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. உற்சவர் நரசிங்க பெருமாள் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.