உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணாடி பல்லக்கில் உலா வந்த திருவள்ளூர் வீரராகவர்

கண்ணாடி பல்லக்கில் உலா வந்த திருவள்ளூர் வீரராகவர்

திருவள்ளூர்; திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கண்ணாடி பல்லக்கில் உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்பபாலித்தார்.

திருவள்ளூர் வீரராகவர் கோவில் சித்திரை பிரம்மோற்சவம், கடந்த 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை உற்சவர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக திருவீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவின் பத்தாம் நாளான நேற்று திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு கண்ணாடிபல்லக்கில் உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்பபாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !