திருவண்ணாமலை விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :533 days ago
திருவண்ணாமலை, சிவசக்தி விநாயகர் கோவில் தெருவில், விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முன்னதாக அணுக்கை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், தீப லெட்சுமி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கால யாக பூஜைகளுக்கு பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.