குனியமுத்தூர் அறம் வளர்த்த அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :897 days ago
கோவை; குனியமுத்தூர், அறம் வளர்த்த அம்மன் கோவில் சித்திரை விழா கடந்த 14ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள், சுவாமி உலா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்து வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.