சிதம்பரம் நடராஜர் கோயிலில் கேரளா உயர் நீதிமன்ற நீதிபதி பாபு சுவாமி தரிசனம்
ADDED :562 days ago
சிதம்பரம் ; கேரளா, உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பாபு சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
சிதம்பரம் கோயிலில் மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்ச பூத தலங்களில் இது ஆகாயம் தலம் ஆகும். மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. சைவத்தில் கோயில் என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கும். இத்தகைய சிறப்பு மிக்க தலத்திற்கு இன்று கேரளா உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பாபு அவர்கள் குடும்பத்தினருடன் வருகை புரிந்தார். அவர்களை கோயில் பாஸ்கர தீக்ஷிதர் வரவேற்று சிறப்பு மரியாதை செய்தார். தொடர்ந்து கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து, அனைத்து சன்னிதிகளிலும் நீதிபதி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.