உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடத்தில் 48ம் நாள் மண்டல பூஜை

காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடத்தில் 48ம் நாள் மண்டல பூஜை

கோவை; கோவை காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடத்தில் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முக்தி அடைந்த, 48ம் நாள் மண்டல பூஜை நேற்று நடந்தது. கோவை காமாட்சிபுரி ஆதினமாக இருந்த, சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முக்தி அடைந்ததையடுத்து, இரண்டாம் பீடாதிபதியாக பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் பதவி ஏற்றுக்கொண்டார். சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முக்தி அடைந்த, 48ம் நாள் மண்டல பூஜை நேற்று நடந்தது. காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை வேள்வி வழிபாடு, 108 சங்காபிஷேகம், சிவபெருமானுக்கு அலங்கார தீபாராதனை ஆகிய பூஜைகளை, பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் செய்தார். பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !