உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசூர் மாரியம்மன் கோவில் மண்டபம் லாரி மோதி சேதம்

அரசூர் மாரியம்மன் கோவில் மண்டபம் லாரி மோதி சேதம்

சூலூர்; அரசூர் மாரியம்மன் கோவில் முன் உள்ள, கிறிஞ்சி மண்டபம், லாரி மோதி சேதமடைந்தது.

சூலூர் அடுத்த அரசூரில் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலின் முன்புறம் கருடகம்பம் மற்றும் கிறிஞ்சி மண்டபம் உள்ளது. கடந்த, 28 ம்தேதி மதியம், அரசூர் - சரவணம்பட்டி ரோட்டில் சென்ற சரக்கு லாரி, கோவில் முன் உள்ள கிறிஞ்சி மண்டபத்தின் மீது மோதியது. இதில், மண்டபம் முற்றிலும் சேதமடைந்தது. தகவல் அறிந்து கோவில் கமிட்டியினர் அங்கு வந்தனர். லாரி டிரைவரான சங்ககிரியை சேர்ந்த சாதிக் பாஷா,48, மற்றும் உரிமையாளர் அமானுல்லா கான் ஆகியோரிடம் விசாரித்தனர். லாரியை பின்புறம் இயக்கியபோது, மண்டபத்தில் மோதியது தெரிந்தது. இழப்பீடு வழங்க பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படாததால், சூலூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !