களத்துப்பட்டி தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :658 days ago
நத்தம், நத்தம் அருகே களத்துப்பட்டி தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி முன்னதாக 15 நாட்களுக்கு முன்னர் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் அம்மன் தேர் ஊர்வலம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை அக்கினி சட்டி, பால்குடம், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். தொடர்ந்து இரவு காப்பு கட்டிய பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மானை தரிசனம் செய்தனர்.