உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி; லட்சார்ச்சனை துவக்கம்

கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி; லட்சார்ச்சனை துவக்கம்

கோவில்பாளையம்; கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், இன்று (மே 1ம் தேதி) குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா நடக்கிறது.

கொங்கு நாட்டு குரு பரிகார ஸ்தலம் என்று அழைக்கப்படுவது கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவில். பழமையான இக்கோவிலில் இன்று மாலை 5:19 மணிக்கு, குருபகவான், மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையடுத்து மதியம் 3:00 மணிக்கு, சிறப்பு யாக பூஜை துவங்குகிறது. தட்சிணாமூர்த்திக்கு, அபிஷேக பூஜை, கலச அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடக்கிறது. நாளை (மே 2ம் தேதி) காலை 8:30 மணிக்கு, துவங்கி, மே 3ம் தேதி இரவு 7:00 மணி வரை, லட்சார்ச்சனை நடைபெறுகிறது. பக்தர்கள், குருபெயர்ச்சி லட்சார்ச்சனை விழாவில், பங்கேற்று, இறையருள் பெற, திருக்கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !