உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லியம்மன் கோவிலில் செடலணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

செல்லியம்மன் கோவிலில் செடலணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

விருத்தாசலம்: செல்லியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செடலணிந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.


விருத்தாசலம் மணலுார் செல்லியம்மன் கோவில் செடல் திருவிழா, கடந்த 15ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக, இன்று காலை 9:00 மணிக்கு மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள், 108 பால்குடம், அக்னி கரகம் ஏந்தி ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 12:00 மணியளவில் பக்தர்கள் செடலணிந்தும், விமான அலகு அணிந்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது. 21ம் தேதி மஞ்சள் நீராட்டு, காப்புகளைதல் நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்தநாள் மாலை 6:00 மணிளவில், செல்லியம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !