உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி திருவிழாவிற்காக கூடலுாரில் தீச்சட்டி எடுத்து வழிபாடு

வீரபாண்டி திருவிழாவிற்காக கூடலுாரில் தீச்சட்டி எடுத்து வழிபாடு

கூடலுார்: கூடலுாரில் வீரபாண்டி திருவிழாவிற்காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


வீரபாண்டி திருவிழா நேற்று துவங்கியது. இதனைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கூடலுாரில் நூற்றுக்கணக்கானோர் தீச்சட்டி எடுத்தனர். வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள காளியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று வழிபட்ட பின் வீரபாண்டிக்குச் சென்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தெற்கு கருணாநிதி காலனியிலிருந்து, வடக்கு காளியம்மன் கோயில் வரை மாநில நெடுஞ்சாலையில் தீச்சட்டி ஊர்வலத்துடன் நடந்து செல்லும் பக்தர்களுக்காக கூடலுார் ஹிந்து முன்னணி சார்பில் தலைவர் ஜெகன் தலைமையில், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி மதிசெல்வம், பிரண்ட்ஸ் கேபிள் கிரிதரன், கருப்பசாமி அறக்கட்டளை நிறுவனர் சக்திவேல் மோர், பழரசம் வழங்கி துவக்கி வைத்தனர். இது தவிர பல்வேறு தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் நீர்மோர், குளிர்பானங்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !