திருவண்ணாமலையில் மகாளய அமாவாசை; அய்யங்குளக்கரையில் அலைமோதிய பக்தர்கள்
ADDED :8 minutes ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு, ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.
புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை முன்னிட்டு, திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் இன்று ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஏராளமானோர் எள், அரிசி, பழத்துடன் பிண்டம் வைத்து, புரோகிதர் முன்னிலையில் சிறப்பு வழிபாடு செய்தனர், அதிகாலை ஏராளமான மக்கள் கலந்து கொண்டு முன்னோரை வழிபட்டனர். ஆண்டுக்கு பலமுறைக்ஷ விழாக்களின் போது அருணாசலேஸ்வரருக்கு இந்தக் குளத்தில் தீர்த்தவாரி மற்றும் தெப்பத் திருவிழா நடைபெறுவது குறிபிடத்தக்கது.