உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடுதுறை காவிரியில் தர்ப்பணம் செய்து வழிபட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்

கூடுதுறை காவிரியில் தர்ப்பணம் செய்து வழிபட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்

ஈரோடு: புரட்டாசி மகாளய அமாவாசையை இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தனது முன்னோர்களுக்கு கூடுதுறை காவிரியில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு சாமி தரிசனம் மேற்கொண்டார். மேலும் கைத்தறித்துறை அமைச்சர் விஜய பாலாஜி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.


பின்னர் அமைச்சர் அருண்ராஜ்  செய்தியாளர்களை சந்தித்த போது; இடைத்தேர்தலில் மக்கள் மகத்தான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். நான்கு மாத நல்லாட்சிக்கான தீர்ப்பு இது. இடைத்தேர்தலில் இந்த மாதிரி நியாயமான முறையில, எதிர் கட்சிகள அவ்வளவு அவங்களுக்கான உரிமையை நம்ம கொடுத்து, வாக்காளர்களைப் பட்டியில் அடிக்காம, பணம் கொடுக்காம, நம்மளுடைய ஆட்சியினுடைய சாதனைகளை மட்டுமே எடுத்துச் சொல்லி இந்த வெற்றியைச் சாதித்திருக்கிறோம். இந்த வெற்றி தொடரும், இதுதான் ஆரம்பம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !