மணலூர்பேட்டை கெங்கையம்மன் கோவில் சாக்கைவாத்தல் விழா
ADDED :559 days ago
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை கெங்கை அம்மன் கோவில் சாக்கை வார்த்தல் விழா நடந்தது.
மணலூர்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள பழமையான கெங்கை அம்மன் கோவிலில் ஒரு வாரத்துக்கு முன்பு கொடியேற்றப்பட்டது. வேண்டுதல் உள்ள பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று காலை மூலவர் கெங்கையம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு வேண்டுதல் உள்ள பக்தர்கள் குழு கூட்டம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்த வந்தனர். சிறப்பு பூஜைக்கு பிறகு கூழ் மற்றும் மாவு படையலிடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.