உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடக்குப்பட்டு சுந்தர வரதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

வடக்குப்பட்டு சுந்தர வரதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ஸ்ரீபெரும்புதுார்;  ஒரகடம் அருகே, வடக்குப்பட்டு சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், 25 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது.


ஒரகடம் அடுத்த, வடக்குப்பட்டு கிராமத்தில், 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிடல் உள்ள இக்கோவிலில், சுந்தர வரதராஜ பெருமாள் நின்ற திருக்கோலத்தில் பூமி நீளாதேவி சமேதராய் அருள்பாளித்து வருகிறார். இக்கோவிலில், 1999ல் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து, கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடந்த வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, மூலவர், தாயார் விமானங்கள் பழுது பார்த்து புதுப்பித்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், சுற்றுச்சுவர் சீரமைத்தல், அலுவலகம் கட்டுதல், மின் மராமத்து பணி, புதிய மரக்கதவுகள் அமைத்தல், வாகன மண்டபம் கட்டுதல் ஆகிய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கும்பாபிஷேகம் நடந்த, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவெடுத்தனர். இதையடுத்து, பிப்., 17ம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கும்பாபிஷேக நாளான இன்று காலை 8:30 மணிக்கு யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பட்டன. காலை 10:00 மணிக்கு மூலவர், தாயார் விமானங்களின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.. ஹிந்து அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் கார்த்திகேயன், ஊராட்சி தலைவர் நந்தினிமேத்தா, கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், ஆய்வர் ரம்யா, அறங்காவலர் குழு தலைவர் வெங்கடகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !