உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசன்ன மஹா கணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா

பிரசன்ன மஹா கணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தி அருகில் உள்ள சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவிலில், வைகாசி மாதம் கும்பாபிஷேக தின விழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு கும்பாபிஷேக தின விழா இன்றும், நாளையும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது.

இன்று காலை, மஹாகணபதி ஹோமம், அபிஷேகம், நித்ய பூஜை, லக் ஷார்ச்சனை, தீபாராதனை, மாலை மூன்று யானைகள் அணிவகுப்புடன் பஞ்சாரி மேளம் முழங்க காழ்ச சீவேலி, குடை மாற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை காலை, 5:00 மணிக்கு அஷ்டபதி, மஹா கணபதி ஹோமம், அபிஷேகம், நித்ய பூஜை, 8:00 மணிக்கு பூர்ணாபிஷேகம், 8:30க்கு பஞ்சவாத்தியம் முழங்க யானைகள் அணிவகுப்புடன் காழ்ச சீவேலி நடக்கிறது. தொடர்ந்து, 11:30 மணிக்கு கும்பாபிஷேகம், புஷ்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க யானைகளின் அணிவகுப்புடன் காழ்ச சீவேலி நடக்கிறது. இரவு நாதஸ்வரம் முழங்க உற்சவர் பல்லக்கில் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !