உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ஞானசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: திம்மையன் பேட்டை ஞானசக்தி விநாயகர், ரேணுகாம்பாள், நாகதேவி அம்மன் கோவிலில் நாளை மறுதினம் கும்பாபிஷேகம் நடக்கிறது.

காஞ்சிபுரம் அடுத்த திம்மையன்பேட்டை கீழ் தெருவில், ஞானசக்தி விநாயகர், ரேணுகாம்பாள், நாகதேவி அம்மன் கோவில் அடுத்தடுத்து அமைந்துள்ளது.

இக்கோவில்களில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை 9:00 மணிக்கு கணபதி, லக் ஷ்மி, நவக்கிரஹ ஹோமமும், மாலை 4:30 மணிக்கு முதல் கால யாகபூஜையும் நடக்கிறது.

நாளை காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடக்கிறது.

மாலை 6:00 மணிக்கு காஞ்சிபுரம் ருத்ரயாழ் இசை மற்றும் நுண்கலை கழக மாணவ – மாணவியரின் குரலிசை, வீணையிசை, மிருதங்க இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு நான்காவது கால யாகபூஜையும், காலை 6:00 மணிக்கு கலச புறப்பாடும், தொடர்ந்து விநாயகர், ரேணுகாம்பாள், நாகதேவி கோவில் கோபுரங்களுக்கு வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கின்றனர்.

தொடர்ந்து மஹா அபிஷேகமும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !