வேடகிரி சிம்ம வாகனத்தில் அங்காளம்மன் திருவீதியுலா
திருப்பூர்: முத்தணம்பாளையம் ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில், மஹா சிவராத்திரி – திருக்கல்யாண உற்சவ விழா, கடந்த 14ல் துவங்கியது.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது; மஹா சிவராத்திரி நாளில், தேவேந்திர பூஜை, முகம் எடுத்து ஆடுதல், மயான பூஜை, வல்லாள கண்டன் சம்ஹாரம் நிகழ்ச்சிகள் நடந்தன. சக்தி விந்தை அழைப்பு, அம்மன் திருக்கல்யாண உற்சவமும், தினமும், அம்மன் திருவீதியுலாவும் நடந்தன இன்று காலை, 7:00 மணிக்கு அம்மன் புறப்பாடு நடந்தது. காலை, 10:00 மணிக்கு உற்சவர் அங்காளம்மன், வேடகிரி சிம்ம வாகனத்தில் திருவீதியுலா வந்த அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். மாலையில், மஞ்சள் நீர் விழாவும், அம்மன் புஷ்ப வாகனத்தில் திருவீதியுலாவும் நடந்தது; நாளை (22ம் தேதி) மஹா கும்ப பூஜை, பேச்சியம்மன் பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.