உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயில்களில் குரு பெயர்ச்சி பூஜை

திருப்பரங்குன்றம் கோயில்களில் குரு பெயர்ச்சி பூஜை

திருப்பரங்குன்றம்; குரு பெயர்ச்சியை முன்னிட்டு திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் நவகிரகங்களுடன் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு முன்பு யாகம் வளர்க்கப்பட்டு அனுக்ஞை பூஜை , நவகிரக சாந்தி ஹோமம், மூல மந்திர ஹோமம் முடிந்து சுவாமிக்கு மகா அபிஷேகம் முடிந்து மலர் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.   பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் தனி சன்னதியிலுள்ள குரு பகவானுக்கு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜை, தீபாராதனைகள் நடந்தது.   அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் மூலவர் குரு பகவானுக்கு 16வகையான திரவிய அபிஷேகங்கள் முடிந்து அலங்காரமாகி கணபதி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம், தீபாராதனை நடந்தது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !