உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சி விழா

பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சி விழா

திருப்புத்தூர்;  திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

இக்கோயில் தட்சிணாமூர்த்தி கிழக்கு திசை நோக்கி எழுந்தருளிய சிறப்பை பெற்றுள்ளது. இதனால் சிறப்பு பெற்ற குருத்தலமாக பக்தர்கள் வழிபடுகின்றனர். இன்று  குருப்பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை 5:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் சிறப்பு அலங்காரத்திலும், உற்ஸவர் கற்பக விருட்ச அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காலை முதல் பக்தர்கள் சாமிதரிசனம் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, காலை 11:03 மணிக்கு குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடகராசிக்கு பெயர்ச்சியானதை முன்னிட்டு ராஜகோபுரத்திற்கும், மூலவர், உற்ஸவருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. கூடியிருந்த பக்தர்கள் குருப்பெயர்ச்சி தீபாராதனையை தரிசித்தனர். தொடர்ந்து பத்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாட்டினை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !