உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் ரோப் கார் பழுது சரி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது

பழநி முருகன் கோயிலில் ரோப் கார் பழுது சரி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது

பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை பழுது அடைந்த கியர்பாக்ஸ் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டது.


பழநி முருகன் கோயில் சென்று வர, வின்ச், ரோப் கார், படிப்பாதை ஆகியவை உள்ளன. மூன்று நிமிடத்தில் ரோப் காரில் கோயிலுக்கு சென்றுவர இயலும். ஆண்டுதோறும் நடைபெறும் பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை ஜூலை 20 முதல் நிறுத்தப்பட்டு பணிகள் நடந்து செப்.22‌ அன்று பக்தர்கள் பயன்பாட்டிற்கு துவங்கியது. பராமரிப்பு பணி முடிந்து துவங்கிய ஒரு மாதத்திற்குள் அக் 20.,ல் ரோப் காரில் முக்கிய பாகமான கியர் பாக்ஸ் பழுது ஏற்பட்டது. உடனடியாக ரோப்கார் நிறுத்தப்பட்டது.‌ இதில் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. பழுதடைந்த கியர் பாக்ஸ் கோவை கொண்டு செல்லப்பட்டு சரி செய்யப்பட்டது. சரியான கியர் பாக்ஸை ரோப் கார் இயந்திரத்தில் பொருத்தி ரோப்கார் பெட்டிகளில் எடை வைத்து சோதனை ஓட்டம் நவ.3ல் நடந்தது. அதன் பின் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இன்று (நவ.4) காலை 7:00 மணி முதல் செயல்பாட்டிற்கு வந்தது. பக்தர்கள் பாதுகாப்பாக ரோப் கார் மூலம் பழநி கோயில் சென்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !